நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா
நடிகை சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தெலுங்கு படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றன. சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி இணையத் தொடர் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் காதலரின் கைகள் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தற்போது மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சுனைனா, "எனது கடைசி பதிவு குறித்து பல செய்திகளை பார்க்க முடிந்தது. அதனால் இதனை தெளிவுப்படுத்துகிறேன். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. எனக்கு அற்புதமான குறுஞ்செய்திகள் மூலம் வாழ்த்துகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அந்த வாழ்த்துகள் மிகவும் பெரிதாக நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
வலைத்தளத்தில் பலரும் சுனைனாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.