அமீர்கான் படத்தின் தோல்வியை கொண்டாடிய நடிகை விஜயசாந்தி


அமீர்கான் படத்தின் தோல்வியை கொண்டாடிய நடிகை விஜயசாந்தி
x

லால் சிங் சத்தா படத்தின் தோல்வியை நடிகை விஜயசாந்தி கொண்டாடி உள்ளார்.

அமீர்கான், கரீனா கபூர், நாகசைதன்யா நடித்து திரைக்கு வந்துள்ள லால்சிங் சத்தா படம் தோல்வி அடைந்துள்ளது. அமீர்கான் சில வருடங்களுக்கு முன்பு சகிப்புத்தன்மை குறைந்துள்ளதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி சொன்னதாக பேசிய வீடியோக்களை வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து லால்சிங் சத்தா படத்தை புறக்கணிக்கும்படி வற்புறுத்தி வந்தனர். இதனாலேயே படம் தோல்வி அடைந்துள்ளது என்கின்றனர்.

லால் சிங் சத்தா படத்தின் தோல்வியை நடிகை விஜயசாந்தி கொண்டாடி உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தி ரசிகர்கள் அமீர்கானை புரிந்து கொண்டதால் அவரது படத்தை வெறுக்கின்றனர். படத்தில் போட்ட முதலீடு கூட திரும்ப வராது. அமீரின் உண்மையான ரூபம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தேசியவாதிகளின் அழைப்பை ஏற்று அவருக்கு ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். மக்களை அப்பாவிகளாக பாவித்து இஷ்டம்போல் பேசினால் பலன் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேசியவாதிகளின் அழைப்பை ஏற்று லால் சிங் சத்தா படத்தை புறக்கணித்தவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story