உண்மையில் புஷ்பா எங்கே..? படக்குழு வெளியிட்ட வீடியோ


உண்மையில் புஷ்பா எங்கே..? படக்குழு வெளியிட்ட வீடியோ
x

அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'புஷ்பா' திரைப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் 'பான் இந்தியா' படமாக வெளியான 'புஷ்பா' வெற்றிகரமாக ஓடி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'புஷ்பா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் புஷ்பா சிறையிலிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'புஷ்பா தி ரூல்' படத்தின் புதிய அறிவிப்பு வருகிற 7-ம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



Next Story