"ஆதிபுருஷ்" படத்துக்கு தடையா?


ஆதிபுருஷ்  படத்துக்கு தடையா?
x

"ஆதிபுருஷ்" படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு வலியுறுத்தியுள்ளார்

ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள "ஆதிபுருஷ்" படத்தில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை சர்வாதிகாரி போன்று தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. பா.ஜ.க.வினர் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு வலியுறுத்தியுள்ளார். இதனால் படத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்துக்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''ஒரு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு படத்தை கணிக்க கூடாது. ராமாயண கதையை புதுமையாக காட்ட படக்குழுவினர் முயற்சித்துள்ளனர். அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை" என்றார்.


Next Story