2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா
நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நானி ஜோடியாக அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடித்து இருந்தார்.
சென்னை,
தமிழில் ராஜாராணி படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா, ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நானி ஜோடியாக அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சூட்சும தரிஷிணி என்ற மலையாள படத்தில் நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் இது புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என்றும் நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
அடுத்து தமிழ் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story