நெல்சன் டைரக்ஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ்
நெல்சன் வெங்கடேசன் டைரக்ஷனில் உருவாகும் ‘பர்ஹானா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' என வித்தியாசமான கதைக் களங்களை ரசிக்கும் வகையில் இயக்கியவர், நெல்சன் வெங்கடேசன் இவரது டைரக்ஷனில் உருவாகும் 'பர்ஹானா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவருடன் டைரக்டர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளார்கள்.
கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக் கதையை டைரக்டர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.