ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'வத்திக்குச்சி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த படத்தில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கட்டிருந்தது. அதன் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story