திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா


திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா
x

நடிகை ஐஸ்வர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.

குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story