'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை தொடர்ந்து 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்துக்கு வரி விலக்கு..!!


தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து சாம்ராட் பிருத்விராஜ் படத்துக்கு  வரி விலக்கு..!!
x

'சாம்ராட் பிருத்விராஜ்' படத்துக்கு 3 மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான "சாம்ராட் பிருத்விராஜ்" தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடிக்கிறார், அதே சமயம் மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் , சோனு சூட் மற்றும் மானவ் விஜ் , அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று லக்னோவில் திரையிடப்பட்டது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்த்தார். படம் பார்த்த பிறகு படக்குழுவை வெகுவாக பாராட்டிய அவர், இந்த திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி பாஜக ஆளும் உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்துக்கு நாடு முழுவதும் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் 'வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story