குட்டை பாவாடையில் ஆலியா பட், கட் வைத்த சேலையில் ராஷ்மிகா மந்தனா... நாட்டு நாட்டு பாடலுக்கு அரங்கம் அதிர நடனம்


குட்டை பாவாடையில் ஆலியா பட், கட் வைத்த சேலையில் ராஷ்மிகா மந்தனா... நாட்டு நாட்டு பாடலுக்கு அரங்கம் அதிர நடனம்
x
தினத்தந்தி 2 April 2023 7:23 AM GMT (Updated: 2 April 2023 7:25 AM GMT)

நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகளான ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக் கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக் கான், உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இதனை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடுவார்கள் என கூறப்பட்டது.

இதனால், அவர்களை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ராஷ்மிகா மந்தனா சேலையில் மேடைக்கு வந்ததும், ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். ஆலியா பட் குட்டை பாவாடையில் தோன்றினார்.

இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடினார்கள். இந்த வீடியோ பின்னர் ரசிகர்களால் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் கடந்த வெள்ளி கிழமை நடந்த ஐ.பி.எல். தொடக்க நிகழ்ச்சியிலும் நாட்டு நாட்டு பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா கலக்கல் நடனம் ஆடினார்.
Next Story