அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு... மிரட்டும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பட டிரைலர்


அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு... மிரட்டும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரைலர்
x

ஆர்யா நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story