சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 'சூர்யா 42' படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு


சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் சூர்யா 42 படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 'சூர்யா 42' படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'சூர்யா 42' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16-ம் தேதி காலை 9.05 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.



Next Story