ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் "சந்திரமுகி - 2" படத்தின் அறிவிப்பு வெளியீடு


ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2 படத்தின் அறிவிப்பு வெளியீடு
x

image tweeted by @LycaProductions

தினத்தந்தி 14 Jun 2022 2:47 PM GMT (Updated: 2022-06-14T20:24:53+05:30)

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் "சந்திரமுகி - 2" படத்தின் அறிவிப்பு வெளிகியுள்ளது.

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'சந்திரமுகி'. 'சிவாஜி புரொடக்ஷன்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயந்தாரா வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரொடக்ஷன்ஸ்' தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


Next Story