'கோட்' படத்தின் முதல் பாடலுக்கு தயாரா ? புதிய போஸ்டர் வெளியீடு!


கோட் படத்தின் முதல் பாடலுக்கு தயாரா ? புதிய போஸ்டர் வெளியீடு!
x

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடல் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

.இந்நிலையில் முதல் பாடலுக்கு தயாரா என படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில். "நாளை சம்பவம் உறுதி" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் முதல்பாடல் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் நடிக்கும் 2ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

1 More update

Next Story