அர்னால்டுக்கு 'பேஸ் மேக்கர்' சிகிச்சை...புகைப்படம் வெளியிட்ட அர்னால்டு


அர்னால்டுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை...புகைப்படம் வெளியிட்ட அர்னால்டு
x

image courtecy:twitter@@Schwarzenegger

அர்னால்டுக்கு இதயப்பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984-ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான்.

அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. அவருக்கு இதயப்பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது. இந்த விஷயம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், பேஸ் மேக்கர் சிகிச்சை குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், நன்றி! நான் உலகம் முழுவதிலுமிருந்து பல வகையான செய்திகளைப் பெற்றுள்ளேன், ஆனால் அதில் முக்கியமாக இது எனது பூபர் சீசன் 2 -ல் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்று பலர் கேட்டுள்ளனர். நிச்சயமாக இல்லை. ஏப்ரலில் படப்பிடிப்புக்கு செல்ல நான் தயாராக இருப்பேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story