டிமான்டி காலனி 2-க்காக இணைந்த அருள்நிதி - அஜய்ஞானமுத்து

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர்.
நடிகர் அருள்நிதி, டைரக்டர் அஜய் ஞானமுத்து இருவரும் இணைந்து பணிபுரிந்த 'டிமாண்டி காலனி' படம், கடந்த 2015-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. மிரட்டலான அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 7 வருடங்களுக்குப்பின், இப்போது உருவாக இருக்கிறது. இதற்காக அருள்நிதியும், அஜய் ஞானமுத்துவும் மீண்டும் இணைகிறார்கள்.
இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். அஜய் ஞானமுத்து தயாரிக்க, அவரிடம் உதவி டைரக்டராக இருந்த வெங்கி வேணுகோபால் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-
''அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் செயல்படுபவர். தனித்துவமான திரைக்கதைகளை வைத்திருக்கும் உதவி டைரக்டர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற முதல் இலக்கு என்று அவரை பாராட்டுகிறார்கள்.
'டிமான்டி காலனி' மூலம் அறிமுகமான அஜய் ஞானமுத்து, 'இமைக்கா நொடிகள்', விரைவில் வரயிருக்கும் 'கோப்ரா' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பெரிய டைரக்டர்கள் பட்டியலில் இருக்கிறார். தற்போது அருள்நிதி, அஜய் ஞானமுத்து இருவரும் 'டிமான்டி காலனி-2' படத்தை உருவாக்க மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.''






