ராஜூவாக மாறிய அரவிந்த்சாமி... வைரலாகும் 'கஸ்டடி' படத்தின் போஸ்டர்...


ராஜூவாக மாறிய அரவிந்த்சாமி... வைரலாகும் கஸ்டடி படத்தின் போஸ்டர்...
x

'கஸ்டடி' திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்த நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அரவிந்த்சாமி 'ராஜூ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story