மேட்ச் பார்க்க ரெடியா? - 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு


மேட்ச் பார்க்க ரெடியா? - சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு
x

ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யாவுடன், பசுபதி, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

இந்த நிலையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'சார்பட்டா ரவுண்ட் 2' என்ற இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்க நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் 'மேட்ச் பாக்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட ரவுண்ட் 2' என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story