60 வயதில் 2-வது திருமணம் செய்த " கில்லி " பட நடிகர்..!


60 வயதில்  2-வது திருமணம் செய்த  கில்லி  பட நடிகர்..!
x

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அசாமைஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னை,

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அசாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆசிஷ் வித்யார்த்தி ஒரு பான் இந்திய நடிகர் என்றாலும் இவர் அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார். இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story