நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் போலீசார் விசாரணை


நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் போலீசார் விசாரணை
x

சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

சென்னை,

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story