உதவியாளரை அழைத்து செருப்பை கழற்ற வைத்த நடிகைக்கு எதிர்ப்பு


உதவியாளரை அழைத்து செருப்பை கழற்ற வைத்த நடிகைக்கு எதிர்ப்பு
x

உதவியாளரை அழைத்து செருப்பை கழற்ற வைத்த நடிகையை வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள்.

சினிமா பிரபலங்கள் நல்லது செய்தால் வானளவு கொண்டாடும் ரசிகர்கள் அவர்கள் சிறிய தவறு செய்தாலும் கடுமையாக விமர்சிக்க தயங்குவது இல்லை. இதனால் பொது நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் கவனமாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர் தான் செய்த ஒரு தவறினால் ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறார். பூமி பட்னேகர் சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த அவரை மேடையில் குத்து விளக்கு ஏற்ற அழைத்தனர்.

அப்போது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு மேடையேற நினைத்தார். ஆனால் செருப்பை அவரால் கழற்ற முடியவில்லை. இதையடுத்து தனது உதவியாளரை அழைத்து தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உதவியாளிடம் செருப்பை கழற்ற சொல்லலாமா? இது என்ன மனநிலை. உங்களிடம் சம்பளம் வாங்கினால் செருப்பை கழற்ற வைப்பீர்களா என்றெல்லாம் வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.


Next Story