சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
x

சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: நடிகை சதா திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? (காஜா மைதீன், ஆவியூர்)

பதில்: வயது நாற்பதை நெருங்கும் நிலையிலும், அவருக்கு அந்த ஆசை இன்னும் வரவில்லையாம்...!

***********

கேள்வி: பாலிவுட் நடிகை இலியானாவுடன் 'செஸ்' விளையாட ஆசைப்படுகிறேன். நடக்குமா? (கார்த்திக், ஒத்தக்கடை, மதுரை)

பதில்: முதல் ஆட்டத்துக்கே விடை தெரியாமல் இருக்கிறது. நீங்களுமா..!

***********

கேள்வி: அஜித்குமாரின் படங்களின் தலைப்பு தொடர்ந்து 'வி' எழுத்திலேயே தொடங்குவதன் மர்மம் என்னவோ? (உலகநாயகி, தேவிப்பட்டினம்)

பதில்: அதில் மர்மம் எதுவும் இல்லையாம். வெற்றிக்கான மந்திரமாம்...!

***********

கேள்வி: 'சிவகார்த்திகேயனை பார்க்கும்போது ரஜினியை பார்ப்பது போல இருக்கிறது', என்று நடிகை சரிதா கூறியிருப்பது பற்றி... (எஸ்.பெஞ்சமின், விருதுநகர்)

பதில்: சீனியர் நடிகை. அவரது பார்வை அப்படி இருக்கிறது...!

***********

கேள்வி: நகைச்சுவை நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (மு.கலிவரதன், காஞ்சீபுரம்)

பதில்: யோகிபாபு. லட்சங்களில் தினக்கூலி வாங்குகிறாராம்...!

***********

கேள்வி: தனுஷ் இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். மேலும் 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்...!

***********

கேள்வி: நதியாவுக்கும், ஓவியாவுக்கும் என்ன வேறுபாடு? (கரிகாலன், ஆனைக்குளம்)

பதில்: நதியா 'கொண்டை'க்கு பேமஸ். ஓவியா 'சண்டை'க்கு பேமஸ்.

**********

கேள்வி: ஜான்வி கபூரை மனதார காதலிக்கிறேன். அவரது வெட்டிங் லிஸ்டில் எனது பெயர் இடம்பெறுமா? (டி.ராதாகிருஷ்ணன், செங்குன்றம், சென்னை)

பதில்: 'வெயிட்டிங்' லிஸ்டில் இடம்பெறலாம்...!

***********


கேள்வி: தமிழ் சினிமாவின் கட்டழகி யார் குருவியாரே? (கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்)

பதில்: 'வாத்தி' படத்தில் நடித்த சம்யுக்தாவை நினைத்துப் பாருங்களேன்..!

************

கேள்வி: படப்பிடிப்பில் நடிகர் ஆர்யா எப்படி? (ஊர்மிளா, தஞ்சாவூர்)

பதில்: அடிக்கடி 'மிஸ் - டேக்' பண்ணுவாராம்...!

***********

கேள்வி: 'ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குடும்பத்துடன் பார்க்கும்படி இல்லை', என்று ஜெனிலியா வருத்தம் தெரிவித்துள்ளாரே... (சந்தீப், கொடைக்கானல்)

பதில்: இதை கேட்ட இளைஞர்களுக்கு தான் ரொம்ப வருத்தமாம்...!

***********

கேள்வி: 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகை யார்? (கவுதமி, மில்லர்புரம், தூத்துக்குடி)

பதில்: கே.ஆர்.விஜயா. 35 படங்களில் இணைந்து நடித்துள்ளார்...!

***********

கேள்வி: முமைத்கானை கவிதை சொல்லி 'கரெக்ட்' செய்ய நினைக்கிறேன்? உதவி செய்யுங்கள் குருவியாரே... (பி.ஜெயபாண்டியன், திருச்செந்தூர்)

பதில்: 'எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...' என்று பாட்டு பாடி அசத்துங்கள். 'லக்' இருந்தால் 'கிக்' அடிக்கலாம்...!

***********

கேள்வி: குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: புதிதாக நடிக்க வரும் அனைவருமே தான்...!

************

கேள்வி: இந்த காலத்திலும் கணவருக்கு பாத பூஜை செய்துள்ளாரே, நடிகை பிரணிதா? (டி.ரமாதேவி, காரைக்கால்)

பதில்: இது ஆரம்பம் தான். போகப் போக தெரியும்...!

************


Next Story