காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி


காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
x

காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இதய கோளாறு காரணமாக பிரபல காமெடி நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நடிகர் போண்டா விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story