'டிமாண்டி காலணி 2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு


டிமாண்டி காலணி 2 படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
x

'டிமாண்டி காலணி 2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிடுள்ளது.

சென்னை,

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டிமாண்டி காலணி 2 படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டுள்ளனர்.


Next Story