கருணாநிதி பிறந்த நாளன்று "விக்ரம்" படம் வெளியிடுவது திட்டமிட்டதா? - கமல்ஹாசன் சுவாரசிய பதில்


கருணாநிதி பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா?  - கமல்ஹாசன் சுவாரசிய பதில்
x

விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

சென்னை,

கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், " 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விக்ரம்' படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான் இயக்குநர் என நான் முடிவு செய்துவிட்டேன்" என தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் "மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் "சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது. இது யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவு " என தெரிவித்தார்.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story