போதைப்பொருள் வழக்கு: நடிகரை கைது செய்ய தடை...!


போதைப்பொருள் வழக்கு: நடிகரை கைது செய்ய தடை...!
x

தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததாக ஐதராபாத்தில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழில் ஏகன், நெஞ்சில், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து நவ்தீப்பை போலீசார் தேடுவதாக அவரது புகைப்படத்துடன் வலைத்தளத்தில் தகவல் பரவியது. நான் எங்கேயும் ஓடவில்லை என்றும், போலீஸ் தேடும் நபர் நான் இல்லை என்றும் நவ்தீப் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தெலுங்கானா ஐகோர்ட்டில் நவ்தீப் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதனையடுத்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story