சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு


சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு
x

‘திரு.மாணிக்கம்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'திரு.மாணிக்கம்' படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமுத்திரக்கனி மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மைனா சுகுமார் பணியாற்றியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 'திரு.மாணிக்கம்' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் வட்டார மொழியில் தங்கள் சொந்த குரலில் பேசியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story