'சர்பிரா' படக்குழுவினரை பாராட்டிய துல்கர் சல்மான்
‘சர்பிரா’ படக்குழுவினரை பாராட்டி நடிகர் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தற்போது, இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கிறார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ராதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படம் கடந்த 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தினை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு கிளாசிக் படத்தை வேறொரு மொழியில் மறுவடிவமைப்பது எப்போதுமே மிகவும் கடினம்" ஆனால், படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, ரீமேக்கை உண்மையானதாகவும், மக்களுக்கு உணரவைப்பதில் சிறந்தவர் என்று பாராட்டினார்.
மேலும், அக்சய் குமாரின் நேர்மை, ராதிகா மதனின் மகிழ்ச்சிகரமான மனநிலை மற்றும் சீமா பிஸ்வாஸின் உணர்வுபூர்வமாக சித்தரிப்பு ஆகியவற்றை பாராட்டி பதிவிட்டுள்ளார்.