பிரபல நடிகை மரணம்


பிரபல நடிகை மரணம்
x

பிரபல மலையாள நடிகை கொச்சின் அம்மினிக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

பிரபல மலையாள நடிகை கொச்சின் அம்மினிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி கொச்சின் அம்மினி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. கொச்சின் அம்மினியின் கணவர் ஜான் குருஷ் ஏற்கனவே இறந்து விட்டார். அம்மினி 12 வயதிலேயே நாடகங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து இருக்கிறார். பாடல்களும் பாடி இருக்கிறார். கண்டம் பச்ச கொட்டட்டு, தூக்குகல் கதா பரயன்னு, உன்னியர்சா, அடிமகல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். பூர்ணிமா ஜெயராமுக்கு மஞ்சில் விரிஞ்ச பூக்கள் மலையாள படத்தில் பின்னணி குரல் கொடுத்து இருந்தார். சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷாகுமாரி உள்ளிட்ட பலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். நிறைய விருதுகளும் பெற்றுள்ளார்.


Next Story