ரசிகர்களின் காத்திருப்பு நிறைவேறியது... ஓ.டி.டி.யில் வெளியானது 'தி லெஜண்ட்'


ரசிகர்களின் காத்திருப்பு நிறைவேறியது... ஓ.டி.டி.யில் வெளியானது தி லெஜண்ட்
x
Gokul Raj B 3 March 2023 4:47 PM GMT

‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சென்னை,

கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தை லெஜண்ட் சரவணன் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஓ.டி.டி.யில் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி இப்படம் இன்று (03.03.2023) மதியம் 12.30 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


Next Story