திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்
நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர் மாலை 5 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story