படமாகும் பழங்குடியினர் பாலியல் வாழ்க்கை


படமாகும் பழங்குடியினர் பாலியல் வாழ்க்கை
x

பழங்குடி மக்களின் பாலியல் வாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கதையம்சத்தில் ‘புதர்’ என்ற படம் தயாராகிறது.

அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சென்டினல் மக்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இதில் பழங்குடியை சேர்ந்த கோக்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு இளம்பெண் தனது பி.எச்டி படிப்பை முடிக்க ஹிடிம்பா என்ற தீவுக்கு செல்கிறாள். அங்கு பழங்குடியினரால் பிடிக்கப்பட்டு அவர்களில் ஒருவராக மாற்றப்படுகிறாள். அந்த பெண் தன்னை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுத்தாளா என்பது கதை. படத்தில் பழங்குடியினரின் மொழியை 70 சதவீதம் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. ராபர்ட், சரண்யா ஆனந்த், டாம், காதம்பரி, பைசல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டாக்டர் அகஸ்டின் டைரக்டு செய்கிறார். ஒளிப்பதிவு: சந்தோஷ் அஞ்சல், இசை: மேரி ஜெனிதா.

1 More update

Next Story