டைட்டானிக் கதாநாயகியின் புதிய அவதாரம்! அவதார்-2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


டைட்டானிக் கதாநாயகியின் புதிய அவதாரம்! அவதார்-2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
x

'அவதார்’ படத்தின் 2ம் பாகத்தில், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் - 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம், 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 16, 2022 அன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் வரவிருக்கும் திரைப்படமான 'அவதார்' படத்தின் 2ம் பாகம் என்றழைக்கப்படும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார்.

இந்நிலையில், கேட் வின்ஸ்லெட்டின் பர்ஸ்ட் லுக் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரொனால் என்று பெயரிடப்பட்ட அவரது கதாபாத்திரத்தின் படங்கள் ஒரு திரைப்பட இதழால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரொனால் கதாபாத்திரம், ஆழ்ந்த விசுவாசமான மற்றும் அச்சமற்ற தலைவர் என்று கேட் வின்ஸ்லெட் விவரித்தார். தனது கதாபாத்திரம் பற்றி பத்திரிகையில் பேசிய வின்ஸ்லெட், "ரோனல் வலிமையானவள். ஒரு போர்வீராங்கனை. கடுமையான ஆபத்தை எதிர்கொண்டாலும், கருவில் இருக்கும் தனது குழந்தையுடன், அவள் இன்னும் தன் மக்களுடன் சேர்ந்து, அவள் மிகவும் விரும்பும் விஷயத்திற்காக போராடுபவள்" என்று விவரித்தார்.

இந்த படத்தில் அவர் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா மற்றும் சிகோர்னி வீவர் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

அவதார்-2வில் தனது கதாபாத்திரத்திற்காக, வின்ஸ்லெட் நீருக்கடியில் அதிக நேரம் மூச்சைப் பிடிக்கக் கற்றுக்கொண்டு நடித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் நீருக்கடியில் நீண்ட நேரம் மூச்சைப் அடக்கியபடி நடித்த நடிகர் டாம் குரூஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூ நடிகை கேட் வின்ஸ்லெட் ஆகிய இருவரின் வெற்றிக்கூட்டணியில் வெளியான 'டைட்டானிக்' உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'அவதார்' படத்தின் 2ம் பாகத்தில், தனது 'டைட்டானிக்' பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார் வின்ஸ்லெட்.

'டைட்டானிக்' திரைப்படத்திற்குப் பிறகு கேமரூனுடன் மீண்டும் இணைவது எப்படி இருந்தது என்பதைப் பற்றி, வின்ஸ்லெட் பத்திரிகையிடம் கூறியதாவது, "ஜிம் மற்றும் நான் இருவரும் 26 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது முற்றிலும் வேறுபட்டவர்கள். அவர் அமைதியாக இருக்கிறார், இப்போது நான் நிச்சயமாக அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன்!" என்றார்.


Next Story