யோகி பாபு நடித்துள்ள 'பூமர் அங்கிள்' படத்தின் புதிய அப்டேட்..!


யோகி பாபு நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் புதிய அப்டேட்..!
x

யோகி பாபு நடித்துள்ள 'பூமர் அங்கிள்' படத்தின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஓவியா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டது. பின்னர் 'பூமர் அங்கிள்' என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ரோபோ சங்கர் சூப்பர் ஹீரோ ஹல்க் போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு ஏஜென்ட் வேம்புலி என்றும் யோகி பாபுவின் கதாபாத்திரத்துக்கு ஏஜென்ட் நேசம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. திருட்டில் சிக்கிய யோகி பாபுவை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அறிவியல் புனைகதைகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.



Next Story