பாபி சிம்ஹா நடிக்கும் 'தடை உடை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x

பாபி சிம்ஹா நடிக்கும் 'தடை உடை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'தடை உடை'. இந்த படத்தில் நாயகியாக மிஷா ரங் நடிக்கிறார். மேலும் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், சிவகங்கையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் இந்த படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





Next Story