ஆஸ்கார் தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற சூர்யாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் சூர்யாவுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக,ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!வானமே எல்லை! என தெரிவித்துள்ளார்.