ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு


ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு
x

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் 'ருத்ரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'பாடாத பாட்டெல்லாம்' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் இன்று (11.02.2023) வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 'ருத்ரன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story