பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் - உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து
பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்த எந்த தடையும் இல்லை என நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்தியாவின் முதல் 'ஆன் ஸ்ட்ரீட் பார்முலா-4 சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான முயற்சி சென்னையின் மதிப்பை உயர்த்தும்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story