"இனி கொண்டாட்ட மன நிலையில்தான் நான் இருப்பேன்" - குஷியில் நடிகை ராஷிகன்னா...!


இனி கொண்டாட்ட மன நிலையில்தான் நான் இருப்பேன் - குஷியில் நடிகை ராஷிகன்னா...!
x

Image Credits : Instagram.com/raashiikhanna

நடிகை ராஷிகன்னா தற்போது பண்டிகை கால குஷியில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷிகன்னா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பண்டிகை கால குஷியில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ராஷிகன்னா கூறும்போது, "நவராத்திரியில் இருந்து புத்தாண்டு வரை பண்டிகை கொண்டாட்ட மன நிலையில்தான் நான் இருப்பேன். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் அம்மனை பூஜை செய்து வழிபடுவேன்.

நவராத்திரி முடிந்ததும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவேன். எனக்கு தீபாவளிதான் பெரிய பண்டிகை. அப்போது பட்டாசுகள் வெடிப்பேன். புதிய ஆடைகள் அணிவேன், இனிப்பு சாப்பிடுவேன்.

அதன்பிறகு நவம்பர் 30-ந் தேதி எனது பிறந்த நாள். அதை கொண்டாடும் ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விடுவேன். தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வரும். எனவே மூன்று மாதங்கள் பண்டிகை கொண்டாட்டங்களிலேயே நான் இருப்பேன்" என்றார்.

1 More update

Next Story