வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்த பிரபலங்களின் பட்டியலில் சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை...!


வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்த பிரபலங்களின் பட்டியலில் சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை...!
x
தினத்தந்தி 10 Oct 2022 7:28 AM GMT (Updated: 10 Oct 2022 8:13 AM GMT)

திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகு வாடகைத் தாய் மூலமாக பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளது.

சென்னை,

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய் மூலமாக அம்மாவான நயன், நிறைய சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள். வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்வது இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, கணவனோ, மனைவியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் குறை இருக்கும் பட்சத்தில், திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகே வாடகைத் தாயை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும், கடந்த ஜனவரி மாதமே வாடகை தாய் மூலமாக குழந்தையைப் பெற்றெடுக்க இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன் பின்னரே நயன் - விக்கி ஜோடி திருமணம் நடந்தேறியது.

வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா நட்சத்திரங்களின் பட்டியல் நீள்கிறது.

அதில்...

* பாலிவுட் நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதியர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து, திரையுலகில் வாடகைத் தாய் முறையை அறிமுகம் செய்தார்கள். இவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் வாடகைத் தாய் மூலமாக பிறந்தார்.

* இந்தியில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கடந்த 2013ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.

* பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

* பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார்.

* பிரபல நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தாவும் கடந்த 2021-ம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

* பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.


Next Story