கவுதம் கார்த்திக் நடித்துள்ள '1947, ஆகஸ்ட் 16' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


கவுதம் கார்த்திக் நடித்துள்ள 1947, ஆகஸ்ட் 16 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

கவுதம் கார்த்திக் நடித்துள்ள '1947, ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், 'ஏ.ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947, ஆகஸ்ட் 16'.

இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி '1947, ஆகஸ்ட் 16' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.


Next Story