"மைதாவை சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதை போல் ஹன்சிகா.." - பரபரப்பை கிளப்பிய ரோபோ சங்கர் பேச்சு


மைதாவை சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதை போல் ஹன்சிகா.. - பரபரப்பை கிளப்பிய ரோபோ சங்கர் பேச்சு
x
தினத்தந்தி 2 July 2023 11:59 AM IST (Updated: 2 July 2023 1:39 PM IST)
t-max-icont-min-icon

'பாட்னர்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.

சென்னை,

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராயல் பார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய ரோபோ சங்கர், ஹன்சிகா பற்றி பேசும்போது, "ஹன்சிகா ஒரு மெழுகு பொம்மை.. மைதா மாவை பிசைந்து, அதனை உருட்டு சுவற்றில் எரிந்தால் ஒட்டிக்கொல்வதை போல் ஹன்சிகா" என்றார்"

மேலும், படப்பிடிப்பு காட்சி ஒன்றில் என்னுடன் சேர்ந்து நடிக்க ஹன்சிகா மறுத்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார். மேடையில் ரோபோ சங்கரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர்கள் ரோபோ சங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 More update

Next Story