தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் - மீண்டும் படம் இயக்குகிறார் தனுஷ்...!
நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இயக்குனர் செல்வராகவனின் தம்பி ஆவார். இவர் நடிப்பில் கடைசியாக நானே வருவேன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அவர் இரு வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில், தனுஷ் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் அசத்தி வரும் தனுஷ், கடந்த 2017-ஆம் ஆண்டு, பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பிறகு அவர் முழுமையாக நடிப்பில் இறங்கினார். அவர் மீண்டும் படம் இயக்குகிறார் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.