'வாரிசு' படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வம்சியை கட்டியணைத்து பாராட்டிய தந்தை..! நெகிழ்ச்சி தருணம்


வாரிசு படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வம்சியை கட்டியணைத்து பாராட்டிய  தந்தை..!  நெகிழ்ச்சி தருணம்
x

இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்

சென்னை,

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியாது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது.

குடும்ப பொழுது போக்காக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது தெலுங்கில் வாரசுடு இன்று வெளியாகியுள்ளது.மேலும் விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வம்சியின் தந்தை 'வாரிசு' படத்தைப்பார்த்து கண்கலங்கியபடியே அவரை கட்டியணைக்கிறார்.

இந்த உணர்ச்சிமிகு தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ள இயக்குநர் வம்சி, "இன்று எனது அப்பா 'வாரிசு' படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா" என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story