சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: உதவி இயக்குநர் கைது


சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: உதவி இயக்குநர் கைது
x

போட்டோ ஷுட் எடுக்க வேண்டும் என கூறி இளம்பெண்ணை இயக்குநர் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் வர்மா (30). சினிமா உதவி இயக்குநர் ஆவார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திர காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் சித்தார்த் வர்மாவுக்கு அறிமுகம் ஆனார். முதல் அறிமுகத்தின் போதே இளம்பெண்ணிடம் பேசிய சித்தார்த் வர்மா, எல்லை மீறியே பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த பெண்ணுக்கு சினிமா ஆசையை தூண்டுவது போல் பேசியுள்ளார். அந்த பெண் அழகாக இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கு என ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை மூளைச்சலவை செய்துள்ளார்.

இதை நம்பிய அந்த பெண்ணுக்கு சினிமா மோகம் துளிர்விட்டது. உடனே அவரிடம், "சார் என்னை எப்படியாவது சினிமாவில் நடிகையாக்கிவிடுங்கள். எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது" என தெரிவித்துவிட்டு யாராவது நடிகையாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தனக்கு போன் செய்யுங்கள் என கூறி நம்பரையும் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து ஒரு நாள் சித்தார்த் வர்மா, அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது, "இயக்குநர்கள் சிலரிடம் பேசியுள்ளேன், அவர்களும் போட்டோ அனுப்புமாறு கேட்டனர். எனவே போட்டோ ஷுட் எடுக்க வேண்டும் உடனே எனது வீட்டுக்கு வா" என அந்த பெண்ணை சித்தார்த் அழைத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய அந்த பெண், சித்தார்த் வர்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சித்தார்த் வர்மா போதையில் இருந்துள்ளார். இந்த பெண்ணை பார்த்ததும், "என்னம்மா போட்டோ எடுக்கலாமா" என கேட்டுள்ளார்.

விபரீதத்தை புரிந்துகொள்ளாமல் அந்த பெண்ணும் "ஓகே சார் எடுக்கலாம்" என கூறினார். அப்போது போட்டோ ஹுட்டில் எப்படி நிற்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என சித்தார்த் வர்மா, அந்த பெண்ணை தொடக் கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு தொட்டு சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மறுத்துள்ளார். உடனே அந்த நபர், "எனக்கு நிறைய இயக்குநர்களையும் சினிமா தயாரிப்பைளர்களையும் தெரியும். நீ ஒத்துழைத்தால் பெரிய நடிகையாகலாம். இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என கூறி சினிமா ஆசை காட்டி இளம்பெண்ணை தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்

இதனால் அந்த பெண்ணும் சினிமா வாய்ப்புக்காக வேறு வழியில்லை என்பதால் ஒப்புக் கொண்டார். இதனால் அவ்வப்போது அந்த இளம்பெண்ணை அழைத்த சித்தார்த் வர்மா, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் எப்போது சினிமா வாய்ப்பு பற்றி கேட்டாலும் தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அது குறித்து வாய்த் திறக்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தான் உடல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை அவர் அறிந்தார். உடனே அவர் கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசர் வழக்குப் பதிவு செய்து சித்தார்த் வர்மாவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story