ஒரு நடிகனாக காட்டு பசியில் இருக்கிறேன் - சிம்பு
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.
சென்னை,
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று (15-09-2022) தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால், திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.