நாக சைதன்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது...! உண்மையை போட்டுடைத்த நடிகை திவான்ஷா கவுசிக்


நாக சைதன்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது...! உண்மையை போட்டுடைத்த  நடிகை திவான்ஷா கவுசிக்
x

நாக சைதன்யா, திவ்யன்ஷா கவுசிக்கை காதலிப்பதாக வதந்திகள் பரவின.

ஐதராபாத்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நாக சைதன்யா 2017 இல் நடிகை சமந்தாவை திருமணம் செய்து நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக, அக்டோபர் 2021 இல் இருவரும் முறையாக விவாகரத்து செய்தனர்.

விவாகரத்துக்குப் பிறகு இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தினர். சமந்தா பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நிலையில், நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு வெளியான லால் சிங் சதா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்இப்படத்தில் அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படம் தயாராகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் நாக சைதன்யாவுடன் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்கள். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த படங்களில் நடிப்பதுடன் நாக சைதன்யா பற்றிய கிசுகிசுக்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

ஹீரோயின்களுடன் சைதன்யாவின் ரகசிய உறவு குறித்து பல தகவல்கள் வெளியாகின. சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா தொடர்பான பல விஷயங்கள் விவாதத்தில் உள்ளன. சமந்தாவுடனான அவரது விவாகரத்து பிரச்சினைக்குப் பிறகு ஊடகங்கள் சைதன்யா மீது கவனம் செலுத்தின. இதனால், பல வதந்திகள் எழுந்தன.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த இளம் ஹீரோயினும் தெலுங்கு நடிகையுமான ஷோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது.. ஷோபிதாவை திருமணம் செய்ய சைதன்யா முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த விவகாரம் என்ன ஆனது?

சமீபத்தில் மஜிலி படத்தின் நடிகை திவ்யன்ஷா கவுசிக் இதுபோல் செய்திகளில் சிக்கினார். நாக சைதன்யா, திவ்யன்ஷா கவுசிக்கை காதலிப்பதாக வதந்திகள் பரவின. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. மேலும், மஜிலி படத்திற்கு பிறகு ராமராவ் இயக்கத்தில் திவ்யன்ஷாவுக்கு ஆன் டூட்டி படத்தில் வாய்ப்பு கிடைக்க நாக சைதன்யா தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சைதன்யா குறித்த தனது கருத்தை தெரிவித்தார். அவரது கருத்துகள் வைரலாகி வருகின்றன.

நாக சைதன்யாவுக்கு விரைவில் திருமணமா? என்ற விவகாரம் குறித்து பதிலளித்த சைதன்யா இதுபோன்ற செய்திகளில் உண்மையில்லை என கூறினார்

இது குறித்து திவ்யன்ஷா கூறும் போது

நாக சைதன்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் ஒரு உண்மையான தனிநபர். இருப்பினும், நாங்கள் தொழில்முறைக்கு வெளியே எந்த தொடர்பு கொள்ளவில்லை. அவரைப் பற்றியோ என்னைப் பற்றியோ நான் வதந்திகளைக் கேட்டதில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த எண்ணங்களில் இருந்ததில்லை."

நாக சைதன்யா பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறார். எங்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் என்று திவ்யன்ஷா கவுஷிக் கூறினார். இதன் மூலம் நாக சைதன்யா-திவ்யன்ஷா கவுசிக் உறவில் அனைவருக்கும் தெளிவு ஏற்பட்டது.

தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக 'மைக்கேல்' படத்தில் நடித்து வரும் திவ்யன்ஷா கவுசிக், சுதிர் வர்மா இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.

1 More update

Next Story