நான் அரசியலுக்கு வந்து விட்டேன் - நடிகர் விஷால்


நான் அரசியலுக்கு வந்து விட்டேன் - நடிகர் விஷால்
x

ஏழைகளுக்கு யார் சேவை செய்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அந்த வகையில் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன் என்கிறார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'கடப்பாவுக்கு படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு சக்தி கிடைக்கும். அந்த சக்தி இப்போது தர்காவில் தரிசனம் செய்ததன் மூலம் முழு அளவில் கிடைத்த உணர்வு ஏற்பட்டு உள்ளது. அனைத்து மத கடவுள்களையும் வழிபடுவேன். ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் பாதயாத்திரையை மையமாக வைத்து திரைப்படம் வெளியாவது நல்ல விஷயம். அவர் பாதை யாத்திரை சென்றபோது பலர் நேரில் பார்த்து இருப்பார்கள். நேரில் பார்க்காதவர்களுக்கு இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பட்ட கஷ்டங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். திரைப்படத்தில் நான் முதல்-மந்திரி ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. நான் நடித்த லத்தி படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். எல்லோரும் எச்சரிக்கையாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்காமல் ஏழைகளுக்கு உதவிகள் செய்யலாம். ரூ.100 செலவு செய்து யார் சேவை செய்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அந்த வகையில் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன்'' என்றார்.


Next Story