விக்ரம் திரைப்படம் குறித்து கேள்விகள் இருந்தால் ஹேஷ்டேக் பயன்படுத்தி கேட்கலாம்- லோகேஷ் கனகராஜ்


விக்ரம் திரைப்படம் குறித்து கேள்விகள் இருந்தால் ஹேஷ்டேக் பயன்படுத்தி கேட்கலாம்- லோகேஷ் கனகராஜ்
x

லோகேஷ் கனகராஜ்-க்கு நேற்று விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 3 தினங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்தது.

படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு நேற்று விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை கமல்ஹாசன் இன்று பரிசளித்துள்ளார்.



இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை கேட்கலாம் என தெரிவித்து உள்ளார். #AskDirLokesh என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி கேள்விகளை கேட்கலாம் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story