பிரபல பாலிவுட் நடிகருடன் தமிழ் நடிகை காதல்...! கைகோர்த்து சுற்றும் புகைப்படம்...!


பிரபல பாலிவுட் நடிகருடன் தமிழ் நடிகை காதல்...! கைகோர்த்து சுற்றும்  புகைப்படம்...!
x

தனக்கும் லேகாவுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு இம்ரான் கான் இதுவரை பதிலளிக்கவில்லை.

மும்பை

பாலிவுட் முன்னாள் நடிகர் இம்ரான் கான் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் இம்ரான் கானும் தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டன்னும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கைகோர்த்தபடி சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெளியான படங்களில், கருப்பு டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து எளிமையான தோற்றத்தில் இம்ரான் கான் இருக்கிறார்.

லேகா கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட அழகான உடை அணிந்துள்ளார். இருவரும் கைகளை பிடித்தபடி வெளியே வருகிறார்கள். விரைவில் அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதிலிருந்து நட்சத்திரங்கள் காதலிப்பது தெளிவாகத் தெரிகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் தனக்கும் லேகாவுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு இம்ரான் கான் இதுவரை பதிலளிக்கவில்லை.யார் இந்த லேகா வாஷிங்டன்...!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை லேகா வாஷிங்டன் அவரது காதலரான பத்திரிகையாளரை மணக்கிறார்.

'உன்னாலே உன்னாலே', 'ஜெயம்கொண்டான்', 'கல்யாண சமையல் சாதம்', 'அரிமா நம்பி' உள்பட பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர் இசை ஆல்பங்களில் ஆடிப்பாடி இருக்கிறார்.

நடிகர் சிம்புவின் கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படம் ஒரு சில காரணத்தினால் கைவிடப்பட்டது. அந்த படத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களே சினிமாவை விட்டு இவர் விலகியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

லேகா வாஷிங்டன், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பல்லோ கட்டர்ஜியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.அவர்கள் திருமணம்ச் எய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர் பின்னர் அவர்கள் கடந்த 2017 நவம்பர் 18-ந்தேதி இருவருக்கும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

யார் இந்த இம்ரான் கான் ...!

ஒரு காலத்தில் பாலிவுட்டில் பிசியான நடிகராக இருந்தவர் இம்ரான் கான். சூப்பர் ஸ்டார் அமீர்கானின் சகோதரியின் மகன் இம்ரான். இம்ரானும் மாமாவின் பாதையில்தான் சினிமாவுக்கு வந்தார்.

1988-ஆம் ஆண்டு 'கயாமத் சே கயாமத் தக்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்

2008-ஆம் ஆண்டு ஜானே தூ யா ஜானே நா படத்தின் மூலம் இம்ரான் ஹீராவாக பாலிவுட்டில் நுழைந்தார். படத்தின் நாயகியாக ஜெனிலியாநடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் இம்ரான் கான் மேரே பிரதர் கே துல்ஹான், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்லி பெல்லி மற்றும் கோரி தேரே பியார் மேம், லக், கிட்னாப், பாம்பே டாக்கீஸ், ஒன்ஸ் அப் ஆன் ய டைம் இன் மும்பை டோபரா' போன்ற படங்களில் நடித்தார். இம்ரானின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.

ரசிகர்களால் விரும்பப்படும் பல படங்களில் ஹீரோவாக நடித்து பாராட்டுகளை பெற்ற இம்ரான், பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். இம்ரான் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இம்ரான் தனது நீண்டகால தோழி அவந்திகாவை மணந்தார். இருவரும் ஜனவரி 10, 2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். இம்ரான் கான், 2019 இல் அவரது முன்னாள் மனைவி, அவந்திகா மாலிக்கிடம் இருந்து சுமுகமாகப் பிரிந்தார். இந்த தம்பதிகளை மீண்டும் இணைக்க நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சித்தனர் ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இம்ரானுக்கும் அவந்திகாவுக்கும் இமாரா என்ற மகள் உள்ளார்.

லேகா வாஷிங்டனுடன் இம்ரானுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புதான் அவந்திகாவிடமிருந்து பிரிந்ததற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அந்தத் தகவல்களை யாரும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவந்திகா மாலிக் மற்றும் சாஹிப் சிங் லம்பா இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஒரு பரஸ்பர நண்பர் மூலம் சந்தித்த பிறகு இருவரும் ஒருவருடன் ஒருவர் பழக ஆரம்பித்தனர். இருப்பினும், அவர்கள் தங்கள் நட்பு குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை


Next Story